உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அபாரம் * வில்லியம்சன் அரைசதம்

வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் அபாரம் * வில்லியம்சன் அரைசதம்

கிறைஸ்ட்சர்ச்: கிறைஸ்ட்சர்ச் முதல் நாளில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231/9 ரன் எடுத்திருந்தது. நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், கிறைஸ்ட்சர்ச்சில் நேற்று துவங்கியது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பீல்டிங் செய்தது.நியூசிலாந்து அணிக்கு கேப்டன் டாம் லதாம், கான்வே ஜோடி துவக்கம் தந்தது. முதல் ஓவரை வீசிய கீமர் ரோச், மூன்றாவது பந்தில் கான்வேயை 'டக்' அவுட்டாக்கினார். பின் வந்த அனுபவ வில்லியம்சன் அரைசதம் கடந்தார். 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த போது, வில்லிம்சன் (52) அவுட்டானார். லதாம் 24 ரன் எடுத்தார். ரச்சின் ரவிந்திரா (3), வில் யங் (14) நிலைக்கவில்லை. பிளன்டெல் (29), நாதன் ஸ்மித் (23) சற்று உதவினர். பிரேஸ்வேல் தன் பங்கிற்கு 47 ரன் எடுத்து கைகொடுத்தார். மழையால் பாதிக்கப்பட்ட முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231/9 ரன் எடுத்திருந்தது. பால்க்ஸ் (4), டபி (4) அவுட்டாகாமல் இருந்தனர். வெஸ்ட் இண்டீஸ் சார்பில் கீமர் ரோச், ஓஜாய், கிரீவ்ஸ் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை