உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ருதுராஜ் சதம்: இந்தியா ஏ அணி வெற்றி

ருதுராஜ் சதம்: இந்தியா ஏ அணி வெற்றி

ராஜ்கோட்: முதல் ஒருநாள் போட்டியில் ருதுராஜ் சதம் விளாச, இந்தியா 'ஏ' அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி, மூன்று போட்டிகள் கொண்ட அதிகாரப்பூர்வமற்ற ஒருநாள் தொடரில் இந்தியா 'ஏ' அணியுடன் விளையாடுகிறது. ராஜ்கோட்டில் முதல் போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த தென் ஆப்ரிக்கா 'ஏ' அணிக்கு ரூபின் ஹெர்மன் (0), ரிவால்டோ மூன்சாமி (10), ஜோர்டான் ஹெர்மன் (0), கேப்டன் ஆக்கர்மேன் (0), சினெதெம்பா கெஷில் (15) ஏமாற்றினர். தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 11.2 ஓவரில், 53/5 ரன் எடுத்து தடுமாறியது.அடுத்து வந்த டயான் பாரெஸ்டர் (77), டெலானோ போட்ஜீட்டர் (90), பிஜோர்ன் போர்டுயின் (59) அரைசதம் கடந்தனர். தென் ஆப்ரிக்கா 'ஏ' அணி 50 ஓவரில், 285/9 ரன் எடுத்தது. இந்தியா 'ஏ' சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.ருதுராஜ் அபாரம்: சவாலான இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா ஜோடி நல்ல துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்த போது அபிஷேக் (31) அவுட்டானார். கேப்டன் திலக் வர்மா (39) ஓரளவு கைகொடுத்தார். அபாரமாக ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் (117) சதம் விளாசினார். பின் வந்த நிதிஷ் குமார் ரெட்டி (37), நிஷாந்த் சிந்து (29*), ஹர்ஷித் ராணா (6*) அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.இந்தியா 'ஏ' அணி 49.3 ஓவரில் 290/6 ரன் எடுத்து வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ