கால்பந்து: இந்திய அணி வெற்றி * உஸ்பெகிஸ்தானை வீழ்த்தியது
மகாபலிபுரம்: உஸ்பெகிஸ்தானுக்கு எதிரான நட்பு போட்டியில் இளம் இந்திய பெண்கள் அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.தாய்லாந்தில் (2026, ஏப். 1-18), பெண்களுக்கான (20 வயது) ஆசிய கோப்பை கால்பந்து 12வது சீசன் நடக்கவுள்ளது. 20 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது இந்தியா. இதற்குத் தயாராகும் வகையில் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்றது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. நேற்று இரண்டாவது போட்டி மகாபலிபுரத்தில் நடந்தது. இதில் இந்திய அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சுலஞ்ஜனா 2, பூமிகா, நேஹா தலா ஒரு கோல் அடித்தனர். கடைசியாக இரு அணிகள் மோதிய போட்டியில் இந்தியா பெற்ற மூன்றாவது வெற்றி இது. ஒரு போட்டி 'டிரா' (1-1) ஆனது.