உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செங்கல்பட்டு மாவட்டத்தில் 750 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

 செங்கல்பட்டு மாவட்டத்தில் 750 ஏக்கர் நெற்பயிர் மூழ்கியது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், 'டிட்வா' புயல் காரணமாக பெய்த மழையால், 750 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, 'டிட்வா' புயல் காரணமாக லேசானது முதல் கனமழை பெய்து வந்தது. மாவட்டத்தில் சம்பா பருவத்திற்கு, 31,000 ஏக்கர் விவசாய நிலங்களில், நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது பெய்த மழையால் திருக்கழுக்குன்றம், அச்சிறுபாக்கம், பவுஞ்சூர், சித்தாமூர், திருப்போரூர் ஆகிய வட்டாரங்களில், 750 ஏக்கர் நெற்பயிர்கள், நீரில் மூழ்கி உள்ளன. இந்த நீரை வெளியேற்ற விவசாயிகளுக்கு, வேளாண் துறை அலுவலர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர். குடிசை விழுந்தது மழை காரணமாக மதுராந்தகம் அடுத்த, தேவாத்துார் கிராமத்தைச் சேர்ந்த ஜமுனா, செய்யூர் தாலுகாவில், முதலியார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி, மேற்கு செய்யூர் பகுதியைச் சேர்ந்த சபாபதி ஆகியோரின் கூரை வீடுகள், பகுதியளவு சேதமடைந்து உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மழையளவு இடம் செ.மீ., செங்கல்பட்டு 0.7 செய்யூர் o கேளம்பாக்கம் 0.6 மாமல்லபுரம் 0.7 மதுராந்தகம் 0 திருக்கழுக்குன்றம் 0.4 திருப்போரூர் 0.7 தாம்பரம் 1.1 மொத்தம் 4.2


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை