மேலும் செய்திகள்
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
15 minutes ago
செங்கல்பட்டு: மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கோரி, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மெய்யூர் கிராம மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மெய்யூர் ஊராட்சி ஏரியில் மண் அள்ள, 2023ம் ஆண்டு தனியாருக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. பாலாற்றுக்கு அருகில் உள்ளதால், இந்த ஏரியில் நான்கு அடி ஆழத்திற்கு மேல் மணல் கிடைத்தது. இந்த மணலை, விற்பனை செய்தனர். தற்போது, மீண்டும் ஏரியில் மண் எடுக்க கனிமவளத் துறை, தனியாருக்கு கடந்த செப்., மாதம் அனுமதி வழங்கியது. அதன் பின், ஏரியில் பல அடி ஆழத்திற்கு மண் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏரியில் மண் எடுக்க அனுமதி வழங்கியதை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு, மெய்யூர் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின், கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பரிமளாதேவியிடம், மனு அளித்தனர். 'மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தெரிவித்தார்.
15 minutes ago