உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கிளாம்பாக்கம் முனையம் நுழைவாயிலில் உடைந்துள்ள மண் வடிகட்டியால் அபாயம்

 கிளாம்பாக்கம் முனையம் நுழைவாயிலில் உடைந்துள்ள மண் வடிகட்டியால் அபாயம்

கிளாம்பாக்கம்:கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவாயிலில், வடிகால் மீது பொருத்தப்பட்டுள்ள மண் வடிகட்டிகள் சேதமடைந்து உள்ளதால், விபத்து அபாயம் நிலவுகிறது. வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்படும் போது, மழைநீர் தேங்காமல் இருக்க, பேருந்து முனையத்தின் உள்ளே பல இடங்களில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. இந்த வடிகால் அனைத்தும், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் நுழைவாயிலில் உள்ள வடிகாலோடு இணைக்கப்பட்டன. மழைநீரில் அடித்து வரப்படும் மண் வடிகால் உள்ளே சேர்ந்து, நீரோட்டத்தை தடுக்கும் என்பதால், மண்ணை அகற்ற, வடிகால் மேல் பகுதியில், இரும்பு சட்டங்களால் அமைக்கப்பட்ட மண் வடிகட்டிகள் பொருத்தப்பட்டன. இதில், பேருந்து முனையத்தின் நுழைவாயில் வடிகால் மேல் பொருத்தப்பட்டுள்ள மண் வடிகட்டிகள் உடைந்து, பள்ளங்கள் உருவாகி உள்ளன. இந்த பள்ளங்களில் வாகனங்களின் சக்கரங்கள் சிக்கி, தினமும் விபத்துகள் நடந்து வருகின்றன. இதுகுறித்து, வாகன ஓட்டிகள் கூறியதாவது: இரும்பு சட்டங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மண் வடிகட்டிகள், தரமற்றதாக உள்ளன. இதனால் தான், அடிக்கடி சேதமாகி, பாதிப்பு ஏற்படுகிறது. கடந்த மாதம் ஒரு மண் வடிகட்டி மட்டும் உடைந்தது. தற்போது, இரண்டு மண் வடிகட்டிகள் உடைந்த நிலையில் உள்ளன. தவிர, 10க்கும் மேற்பட்டவை உடையும் நிலையில் உள்ளன. நுழைவாயிலில், ஜி.எஸ்.டி., சாலையில் இவை உள்ளதால், அரசு பேருந்துகள் மட்டுமல்லாது, பேருந்து முனையம் உள்ளே வரும் அனைத்து வாகனங்களும், ஜி.எஸ்.டி., சாலையில் செல்லும் வாகனங்களும் விபத்தில் சிக்குகின்றன. மண் வடிகட்டி பள்ளங்களால் உயிர்பலி ஏற்படவும் வாய்ப்புள்ளதால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான புதிய வடிகட்டிகளை வடிகாலின் மேல் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ