இளம்பெண்ணை கிண்டல் செய்த போதை வாலிபருக்கு காப்பு
மறைமலைநகர்: காட்டாங்கொளத்துாரில், இளம்பெண்ணை கிண்டல் செய்த போதை வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 23வயது இளம்பெண், மறைமலை நகர் அடுத்த பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலையில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் தன் நண்பர்களுடன், காட்டாங்கொளத்துார் பகுதியில் உள்ள டீ கடைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவர், மதுபோதையில் இளம்பெண்ணை கிண்டல் செய்து, ஆபாசமாக பேசியுள்ளார். இது குறித்து இளம்பெண், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார், இளம்பெண்ணிடம் மதுபோதையில் அத்துமீறிய, காட்டாங்கொளத்துாரைச் சேர்ந்த ராகுல்,25, என்பவரை கைது செய்தனர். அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.