உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

 போக்குவரத்து விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியில், போக்குவரத்து விதிகளை மீறிய 15 வாகனங்களுக்கு, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார். செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் வரி, வாகன தகுதிச்சான்று, ஓட்டுநர் உரிமம், காப்பீடு இல்லாமல் வாகனங்கள் இயக்கப்படுவதாக, செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து, வட்டார போக்குவரத்து அலுவலர் இளங்கோ தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி உள்ளிட்டோர் செங்கல்பட்டு, சிங்கபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் நேற்று, திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், வாகனங்களுக்கு வரி செலுத்தாதது, தகுதிச்சான்று, காப்பீடு, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்கப்பட்ட 15 வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதன் உரிமையாளர்களுக்கு, 2.25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக, வட்டார போக்குவரத்து அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை