மேலும் செய்திகள்
இருளர் பகுதியில் சாலை அமைக்க ரூ.13 லட்சம் ஒதுக்கீடு
6 minutes ago
ரூ.2.25 கோடி மதிப்பில் பள்ளி வகுப்பறைகள் திறப்பு
7 minutes ago
இன்று இனிதாக ... (07.12.2025) செங்கல்பட்டு
7 minutes ago
மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏரிகள் நிரம்பி வெளியேறும் உபரிநீர், பாலாற்றில் கலந்து பெருக்கெடுத்து ஓடுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில், ஏரிகள் நிறைந்து, ஏரிகள் மாவட்டமாக விளங்குகிறது. 100 ஏக்கர் பரப்பிற்கும் அதிகமாக உள்ள ஏரிகள் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டிலும், அதற்கும் குறைவான பரப்புள்ள ஏரிகள், ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டிலும் உள்ளன. இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய வடகிழக்கு பருவமழை, தற்போதைய காற்றழுத்த தாழ்வு நிலை, 'டிட்வா' புயல் ஆகியவற்றால் கனமழை பெய்தது. திருக்கழுக்குன்றம் பொதுப்பணித்துறை பிரிவிற்கு உட்பட்ட புதுப்பட்டினம், ஆயப்பாக்கம், லட்டூர், பட்டிக்காடு, முள்ளிகொளத்துார், நத்தம் கரியச்சேரி, பாண்டூர், முத்திகைநல்லான்குப்பம் உள்ளிட்ட 30 ஏரிகள், முழு கொள்ளளவு நிரம்பின. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேறி, கால்வாய்கள் வழியாக பாலாற்றில் கலக்கிறது. இதனால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதன்படி வாயலுார், வல்லிபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பணை களில், தலா 1 டி.எம்.சி ., நீர் நிரம்பி, வாயலுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.
6 minutes ago
7 minutes ago
7 minutes ago