ரயில்வே மாஜி ஊழியர் கிழக்கு தாம்பரத்தில் மாயம்
சென்னை: வெளியே சென்று வருவதாக கூறிச் சென்று மாயமான, ரயில்வே மாஜி ஊழியர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர். கிழக்கு தாம்பரம், ராமகிருஷ்ணாபுரம், கம்பர் தெருவைச் சேர்ந்தவர் நாராயணசாமி, 75. ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். நவ., 9ம் தேதி, வெளியே சென்று வருவதாக கூறி சென்றார். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது குடும்பத்தினர் சிட்லப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து, முதியவரை தேடி வருகின்றனர்.