மேலும் செய்திகள்
காஞ்சியில் வரும் 29ல் கிராம சபை கூட்டம்
22-Mar-2025
செங்கல்பட்டு மாவட்டத்தில், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, 'பனிப் பாறைகள் பாதுகாப்பு' எனும் தலைப்பில், ஊராட்சிகளில் நேற்று, கிராம சபை கூட்டம் நடந்தது.கூடுவாஞ்சேரி அடுத்த பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பெருமாட்டுநல்லுார் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், கலெக்டர் அருண்ராஜ், தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி, கோட்டாட்சியர் சசிகலா உட்பட, பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.காலை 11:50க்கு துவங்கிய இக்கூட்டத்தில், 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர். நீர்வள பாதுகாப்பின் அவசியம், கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது.சாலை, கால்வாய் வசதி உள்ளிட்ட அடிப்படை பணிகள் நிறைவேற்றுவது குறித்து, 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின், பொதுமக்கள் தங்கள் பகுதியில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகளை கோரிக்கை மனுக்களாக கலெக்டரிடம் வழங்கினர்.*திருப்போரூர்திருப்போரூர் ஒன்றியம், முட்டுக்காடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி தலைவர் சங்கீதா தலைமை வகித்தார்.இதில் குடிநீர் தேவை, குடிநீர் துாய்மை, சிக்கனமாக பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.இதையடுத்து, கழிப்பட்டூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை போக்க புதிய குடிநீர் கிணறு அமைத்தல், கலைஞர் கனவு இல்லத்தில் பயனாளி தேர்ந்தெடுத்தல், ஏகாட்டூரில் மயான சாலை சீரமைத்தல் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.* செங்கல்பட்டுசெங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராமசபை கூட்டம், நேற்று நடந்தது.ஆலப்பாக்கம் ஊராட்சியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி, கிராம சபை கூட்டம், தலைவர் பரிமளா தலைமையில், மலையடி வேண்பாக்கம் நடுநிலை பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், ஒன்றிய கவுன்சிலர் நிந்திமதி திருமலை, வனக்குழு தலைவர் திருமலை, ஊராட்சி செயலர் மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், ஊராட்சியில் மூன்று இடங்களில் புதிய கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும். பழைய அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடம் கட்டித்தர வேண்டும். ஏரிகளை துார்வாரி சீரமைக்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கிராமவாசிகள் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கைகள், தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. - நமது நிருபர் குழு -
22-Mar-2025