உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பரனுார் ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகே உயர்கோபுர மின் விளக்கு அவசியம்

 பரனுார் ஆர்.டி.ஓ., ஆபீஸ் அருகே உயர்கோபுர மின் விளக்கு அவசியம்

சிங்கபெருமாள் கோவில்: பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலக பேருந்து நிறுத்தம் அருகே, உயர்கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு -- தாம்பரம் தடத்தில் தினமும், 30க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள், சுழற்றி முறையில் இயக்கப்படுகின்றன. இந்த தடத்தில் பரனுார் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த இரு மார்க்கங்களிலும் உள்ள பேருந்து நிறுத்தத்தை பரனுார், டாக்கா நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்த பகுதியில் வாடகைக்கு தங்கி தனியார் தொழிற்சாலைகளில் வேலை பார்க்கும் இளம்பெண்கள், இங்கு காத்திருந்து தங்களின் தொழிற்சாலை பேருந்துகளில் செல்கின்றனர். இந்த பகுதியில் தாம்பரம் மார்க்கத்தில் மின் விளக்குகள் இல்லாததால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அதே போல செங்கல்பட்டு மார்க்கத்தில் உள்ள உயர்கோபுர மின் விளக்குகள், பல மாதங்களாக பழுதடைந்து உள்ளன. இதன் காரணமாக இந்த பகுதி இருள் சூழ்ந்துள்ளது. பேருந்துக்கு காத்திருப்போர் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், சாலையைக் கடக்கும் பாதசாரிகள் விபத்து ஏற்படுமோ என்ற அச்சத்துடன் சென்று வரும் நிலை உள்ளது. எனவே, இந்த பகுதியில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி