உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்

 வேதகிரீஸ்வரர் கோவிலில் நாளை கார்த்திகை தீபம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், இன்று பரணி தீபமும், நாளை கார்த்திகை மஹாதீபமும் ஏற்றப்படுகிறது. திருக்கழுக்குன்றத்தில், பிரசித்தி பெற்ற வேதகிரீஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, இன்று மாலை 6:00 மணிக்கு மலைக்கோவில், தரைப்பகுதி பக்தவச்சலேஸ்வரர் கோவில் ஆகியவற்றில், பரணி தீபம் ஏற்றப்படுகிறது. நாளை காலை, பஞ்சமூர்த்தி சுவாமியருக்கு சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும். மாலை, கோவில் ஊழியர்கள், குடங்களுடன் மாடவீதிகளில் சென்று, பக்தர்கள் உபயமாக அளிக்கும் எண்ணெயுடன், வேதகிரீஸ்வரர் கோவிலை அடைந்து, 6:00 மணிக்கு மஹா தீபம் ஏற்றுவர். சொக்கப்பனை விநாயகர் கோவில் பகுதியில், இரவு சொக்கப்பனை ஏற்றி, பஞ்சமூர்த்தி சுவாமியர் வீதியுலா செல்வர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை