உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

 துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

மறைமலை நகர்: காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகிலுள்ள மரத்தில், துாக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்ததில், இறந்த நபர் நந்திவரம் - கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், 35, என தெரிந்தது. தைலாவரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் 'பிளம்பராக' வேலை பார்த்து வந்த வெங்கடேசனுக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். வெங்கடேசன் கடந்த சில நாட்களுக்கு முன், தன் நண்பரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக் கொண்டு, நந்திவரம் சென்றுள்ளார். அங்கு நிறுத்தி வைத்த போது, மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றுள்ளனர். இதில் கடும் மன உளைச்சலில் இருந்த வெங்கடேசன், நேற்று முன்தினம் காட்டாங்கொளத்துார் ரயில் நிலையம் அருகில் உள்ள மரம் ஒன்றில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை