மேலும் செய்திகள்
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
6 minutes ago
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
10 minutes ago
திருப்போரூர்:திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையோரம், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் செங்கல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை, வேலுார் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, லாரிகள் மூலமாக செங்கல் கொண்டு வரப்பட்டு, திருப்போரூர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. செங்கல் ஏற்றி வரும் லாரிகள், திருப்போரூர் - திருக்கழுக்குன்றம் சாலையில் உள்ள எடையான்குப்பம் கிராமத்தில், வரிசையாக நிறுத்தப்படுகின்றன. இதனால், போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், இந்த லாரிகள் மீது மற்ற வாகனங்கள் மோதி, விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் நிறுத்தப்படும் செங்கல் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 minutes ago
10 minutes ago