மேலும் செய்திகள்
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
6 minutes ago
சிங்கபெருமாள் கோவில்:சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் குவிந்துள்ள குப்பையை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலை 25 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை சுற்றியுள்ள திருக்கச்சூர், தெள்ளிமேடு, ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒரகடம், ஸ்ரீ பெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வந்து செல்லும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், தினமும் இச்சாலையில் சென்று வருகின்றன. இந்த சாலையை ஒட்டி கொளத்துார் பகுதியில் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு இடத்தில், தாம்பரம் மாநகராட்சியில் இருந்து லாரிகள் மூலமாக குப்பை கொண்டு வரப்பட்டு கொட்டப்படுகின்றன. குப்பையை கொட்டி விட்டுச் செல்லும் லாரி ஓட்டுநர்கள், கடைசியாக உள்ள குப்பையை, நெடுஞ்சாலையில் தொடர்ந்து கொட்டி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக, சாலையின் இருபுறமும் குப்பை, மின்சார ஒயர்கள் மற்றும் மணல் திட்டுகள் பல்வேறு இடங்களில் பரவி காணப்படுகின்றன. இதன் காரணமாக வாகனங்கள் செல்லும் போது, கடும் துர்நாற்றம் வீசுவதோடு, புழுதி பறந்து சக வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச பிரச்னைகளால் அவதியடைந்து வருகின்றனர். மேலும், வேகமாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மணல் திட்டுகள் மீது செல்லும் போது, சறுக்கி கீழே விழுந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே, இவற்றை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாளுக்கு நாள் குப்பை லாரி ஓட்டி வரும் ஓட்டுநர்கள், நெடுஞ்சாலையை பாழ்படுத்தி வருகின்றனர். குப்பை ஏற்றி வரும் போது தார்ப்பாய் மூடாமல் வருவது, நெடுஞ்சாலையில்,'டாரஸ்' லாரிகளை நிறுத்திவிட்டு எச்சரிக்கை விளக்குகளை எரிய விடாமல் இருப்பது போன்ற செயல்களால் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன், நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குப்பை லாரி மீது இருசக்கர வாகனம் மோதி, வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். நேற்று மதியம் சாலையில் பரவி கிடந்த குப்பையில் சிக்கி, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் படுகாயமடைந்தனர். இதன் காரணமாக, இந்த சாலையை பயன்படுத்த அச்சமாக உள்ளது. - ஆர்.சுகுமார், சிங்கபெருமாள் கோவில் - நமது நிருபர்-
6 minutes ago