மேலும் செய்திகள்
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
15 minutes ago
தெள்ளிமேடு கிராமத்தில் சுடுகாடு ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
18 minutes ago
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
19 minutes ago
புதுப்பட்டினம்:புதுப்பட்டினம் துணை சுகாதார மையத்திற்கு, 45 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய கட்டடம் கட்டப்படுகிறது. கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சிப் பகுதி, நகர பகுதியாக வளர்ச்சியடைந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் பல்வேறு கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்களின் மருத்துவ தேவைக்காக, துணை சுகாதார மையம் இயங்குகிறது. இம்மைய கட்டடம் நீண்ட காலத்திற்கு முன்பே பலமிழந்து, படிப்படியாக இடிந்தது. சில ஆண்டுகளுக்கு முன், அங்குள்ள வேறோரு குறுகிய கட்டடத்திற்கு, இந்த துணை சுகாதார மையம் மாற்றப்பட்டு இயங்கி வருகிறது. இதனால், பழைய கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுமாறு, பொதுமக்கள் வலியுறுத்தினர். இதையடுத்து, புதிய கட்டடம் கட்டடப்படுகிறது. புதிய கட்டடம், கான்கிரீட் அணுகுபாதை உள்ளிட்டவை அமைக்க, மாவட்ட ஊராட்சி, 15வது நிதிக்குழு நிதியில் இருந்து, 45 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு இப்பணிகள் நடப்பதாக, வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.
15 minutes ago
18 minutes ago
19 minutes ago