உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்: சீரமைக்க பயணியர் கோரிக்கை

 பஸ் நிறுத்த நிழற்குடை சேதம்: சீரமைக்க பயணியர் கோரிக்கை

மறைமலை நகர்: சிங்கபெருமாள் கோவில் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, பிரசித்தி பெற்ற வீரபத்திரர் கோவில் உள்ளது. மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசை நாட்களில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனால் அனுமந்தபுரத்திற்கு தாம்பரத்தில் இருந்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வீரபத்திரர் கோவிலுக்கு அருகே பேருந்து நிறுத்தத்தில், நிழற்குடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிழற்குடை கடுமையாக சேதமடைந்து உள்ளது. கான்கிரீட் தளத்தில் மரக்கன்றுகள் வளர்ந்து, சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. அபாய நிலையில் உள்ளதால், பயணியர் பெரும்பாலானோர் நிழற்குடையை பயன்படுத்துவதை தவிர்த்து, சாலை ஓரத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே, இந்த பேருந்து நிழற்குடையை சீரமைக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ