மேலும் செய்திகள்
சின்னகயப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
6 minutes ago
சென்னேரி சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் வேண்டுகோள்
10 minutes ago
அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அடுத்த பள்ளிப்பேட்டை ஊராட்சியில், உடைந்து விழும் நிலையிலுள்ள மின்மாற்றி கம்பத்தை சீரமைக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுபாக்கம் அருகே பள்ளிப்பேட்டை ஊராட்சி உள்ளது. இங்குள்ள ஸ்ரீ ராமலு நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மின்மாற்றி கம்பத்தின் கான்கிரீட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்த இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. அடிக்கடி, மின்மாற்றி கம்பத்திலிருந்து கான்கிரீட் பூச்சு உதிர்ந்து விழுகிறது. தற்போது வடகிழக்கு பருவ மழைக்காலம் என்பதால், காற்றின் வேகத்தில் மின்மாற்றி கம்பம் உடைந்து, விபத்து ஏற்படும் வகையில் உள்ளது. இந்த மின்மாற்றி கம்பத்தை மாற்றிவிட்டு, புதிதாக அமைத்து தரக்கோரி பகுதி பொதுமக்கள், அச்சிறுபாக்கம் மின்வாரியத் துறையினரிடம் பலமுறை மனு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அலட்சியப்போக்குடன் மின்வாரியத் துறையினர் செயல்படுவதாக, இப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, அச்சிறுபாக்கம் மின்வாரியத் துறையினர், இந்த மின்மாற்றி கம்பத்தை மாற்றி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
6 minutes ago
10 minutes ago