உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மறைமலை நகர் அணுகுசாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

 மறைமலை நகர் அணுகுசாலையில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை

மறைமலை நகர்: கீழக்கரணையில், அணுகுசாலையில் மின் விளக்குகள் அமைக்க வேண்டுமேன, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மறைமலை நகர் அடுத்த பேரமனுார், கீழக்கரணை, மெல்ரோசாபுரம் உள்ளிட்டவை, மறைமலை நகர் நகராட்சி எல்லையில் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள பேருந்து நிறுத்தம், வணிக கட்டடங்கள், தொழிற்சாலைகளுக்கு சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பெண் தொழிலாளர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இந்த பகுதியில் உள்ள அணுகுசாலைகளில் முறையாக தெருவிளக்குகள் இல்லாததால், இந்த பகுதியில் இருள் சூழ்ந்து உள்ளதால், பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது: இந்த பகுதியில் உள்ள அணுகுசாலையை, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இருபுறமும் உள்ள அணுகுசாலையில் மின்விளக்குகள் இல்லாததால் பெண்கள், குழந்தைகள் அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. விபத்து மற்றும் திருட்டு பயத்துடன் இந்த பகுதிகளை கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், இந்த பகுதியில் மின் விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை