உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பூங்குணம் சாலையில் தெரு விளக்கின்றி அவதி

 பூங்குணம் சாலையில் தெரு விளக்கின்றி அவதி

சி த்தாமூர் அருகே அச்சிறுபாக்கம் - போந்துார் மாநில நெடுஞ்சாலையில், முத்துவிநாயகபுரம் கிராமத்தில் இருந்து பூங்குணம் கிராமத்திற்குச் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பல ஆண்டுகளாக தெரு விளக்கு வசதி இல்லை. சாலை அருகே காட்டுப்பகுதி உள்ளதால், இரவு நேரத்தில் சாலையில் விஷ பாம்புகள் மற்றும் விஷ பூச்சிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால், சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர். பூங்குணம் சாலையில் 'சோலார்' தெரு விளக்கு வசதி ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். - அ.குமரேசன், சித்தாமூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ