உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருவான்மியூர் - மாமல்லை ஏசி பஸ் இயக்கம்

திருவான்மியூர் - மாமல்லை ஏசி பஸ் இயக்கம்

மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால பாரம்பரிய சிற்பங்களை, இந்திய, சர்வதேச சுற்றுலா பயணியர் கண்டு ரசிக்கின்றனர். சென்னை மற்றும் சுற்றுபுற பகுதியினர், வார இறுதி, அரசு விடுமுறை ஆகிய நாட்களில், ஒருநாள் சுற்றுலாவாக, இங்கு படையெடுக்கின்றனர். தனி வாகனத்தில், பயணியர் வருவது ஒருபுறமிருந்தாலும், அரசு பேருந்துகளிலும் ஏராளமானோர் வருகின்றனர்.சென்னை திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, தடம் எண் 588 மாநகர் போக்குவரத்துக் கழக சாதாரண பேருந்து இயக்கப்படுகிறது. இத்தடத்தில் குளிர்சாதன பேருந்து வசதி இல்லை. தற்போது பகலில் கடும் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், பயணியர் சாதாரண பேருந்தில், சிரமத்துடன் பயணம் செய்கின்றனர். அவர்கள் நலன் கருதி, வார இறுதி விடுமுறை நாட்களில் மட்டும், திருவான்மியூர் - மாமல்லபுரம் இடையே, தற்போது குளிர்சாதன பேருந்து போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. திருவான்மியூர் - மாமல்லபுரம் கட்டணம் 70 ரூபாய், குறைந்தபட்ச கட்டணம் 15 ரூபாய் வசூலிக்கப்படுவதாக, நடத்துனர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ