உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

 கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

திருப்போரூர்: கேளம்பாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்திலுள்ள கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் நேற்று, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. திருப்போரூர் ஒன்றியம், கேளம்பாக்கம் அடுத்த கொளத்துார் கிராமத்தில், 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த, கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இக்கோவிலில், 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. மீண்டும் கும்பாபிஷேகம் செய்வதற்காக கிராம மக்கள், அறநிலையத்துறை இணைந்து முடிவு செய்து, கடந்த சில மாதங்களுக்கு முன் பாலாலயம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, கோவிலில் திருப்பணிகள் நடைபெற்றன. அனைத்து திருப்பணிகளும் நிறை வடைந்த நிலையில், நேற்று காலை 9:00 மணி யளவில் புனித நீர் ஊற்றி, கோவில் கோபுர கலசங்கள், மூலஸ்தானத்திற்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, அனைத்து சன்னிதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகளும் நடந்தன. திருப்போரூர் கந்தசுவாமி கோவில் செயல் அலுவலர் குமரவேல் உட்பட, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர், இந்த கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை