மேலும் செய்திகள்
கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
7 minutes ago
செட்டிபுண்ணியம் சாலையை சீரமைப்பது எப்போது?
8 minutes ago
காட்டூரில் சாலை அமைக்க வேண்டும்
9 minutes ago
செ ன்னை -- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ள இச்சாலையில் இருந்து பிரிந்து தொழுப்பேடு, ஒரத்தி வழியாக வந்தவாசி வரை செல்லும் மாநில நெடுஞ்சாலை உள்ளது. இதில், தொழுப்பேடு பகுதியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் மீதும், பக்கவாட்டிலும் அரச மரக்கன்றுகள், வேப்ப மரக்கன்றுகள் உள்ளிட்டவை வளர்ந்து உள்ளன. இதன் காரணமாக, மேம்பாலம் உறுதித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. மேலும், இந்த சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகள் எரியாமல், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, இந்த மேம்பாலத்தில் உள்ள மரக்கன்றுகளை வெட்டி அகற்றி, மின்விளக்குகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - யஷ்வந்த், தொழுப்பேடு.
7 minutes ago
8 minutes ago
9 minutes ago