உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கிணறு துார்வாரும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

 கிணறு துார்வாரும் போது மண் சரிந்து தொழிலாளி பலி

பவுஞ்சூர்: லத்துாரில், கிணறு துார்வாரும் பணியின் போது மண் சரிந்து, தொழிலாளி உயிரிழந்தார். பவுஞ்சூர் அடுத்த பெரியவெளிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 52; கிணறு தோண்டும் பணி செய்து வந்தார். கடந்த சில நாட்களாக, லத்துார் கிராமத்தில் உள்ள பூமிதான நிலத்தில் உள்ள விவசாய கிணற்றில், துார்வாரும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை, கிணற்றின் உள்ளே வேலை செய்த போது, கிணற்றில் இருந்த மண் மற்றும் பாறை சரிந்து, கோவிந்தராஜ் மீது விழுந்துள்ளன. பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தோர் இடிபாடுகளில் இருந்து மீட்டு, ஆம்புலன்ஸ் மூலமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில், சிகிச்சை பலனின்றி கோவிந்தராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து, அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி