உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்

 2 விரைவு ரயில்களில் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள்

சென்னை: சென்னை - மும்பை, எழும்பூர் - சேலம் விரைவு ரயில்களில், வரும் ஜனவரி முதல் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்பட உள்ளது. விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு, எல்.எச்.பி., எனப்படும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது, அதிர்வுகள் இல்லாமல், பாதுகாப்பாகவும் வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மும்பை சி.எஸ்.எம்.டி., - எழும்பூர் விரைவு ரயில் வரும் ஜன., 14 முதலும், எழும்பூர் - சேலம் விரைவு ரயிலில் வரும் ஜன., 15 முதலும் எல்.எச்.பி., பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. குறைப்பு ஏன்? புதிதாக இணைக்கும் ரயில் பெட்டிகளில், 'ஏசி' இல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் ஐந்து இருக்கும் என, குறிப்பிடப்பட்டது. தற்போது, எட்டு பெட்டிகளாக இருந்து வரும் நிலையில், மூன்று பெட்டிகளை குறைப்பது ஏன் என, பயணியர் கேள்வி எழுப்பியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை