உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் பூந்தமல்லியில் 3 பேர் சிக்கினர்

 ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் பூந்தமல்லியில் 3 பேர் சிக்கினர்

நீலாங்கரை: ரியல் எஸ்டேட் அதிபரை காரில் கடத்திய மூன்று பேரை, போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர். நீலாங்கரை, கணேஷ் நகரைச் சேர்ந்தவர் பச்சையப்பன், 45. இவரும், கே.கே., நகரைச் சேர்ந்த வெற்றி என்பவரும் சேர்ந்து, ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றனர். இவர்களுடன் தொழில் புரிய, வெற்றியின் நண்பர் விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சங்க ர், 40, என்பவரும் இணைந்தார். இந்நிலையில் பச்சையப்பன் மற்றும் வெற்றி, நிலம் விற்பனை செய்ததற்கான கமிஷன் தொகையை, சங்கருக்கு தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கர், நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து, நேற்று காலை, நீலாங்கரையில் இருந்த பச்சையப்பனை, 'சைலோ' காருடன் கடத்தி பூந்தமல்லிக்கு கொண்டு சென்றனர். அங்கு, வெற்றி இருந்துள்ளார். மூவருக்கும் இடையே, சாலையில் தகராறு ஏற்பட்டுள்ளது. பகுதிமக்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். ரோந்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்றபோது, பச்சையப்பன், வெற்றி, சங்கர் ஆகியோர் தப்பி ஓடினர். கடத்தலுக்கு உதவ வந்த முத்துக்குமார், 35, ஜோசப், 38, திலக்ஜான், 34, ஆகியோர் போலீசாரிடம் சிக்கினர். கடத்தல் சம்பவம் நீலாங்கரையில் நடந்ததால், மூன்று பேரையும் நீலாங்கரை போலீசில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை