உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கும்மிடிப்பூண்டி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து

 கும்மிடிப்பூண்டி தடத்தில் 8 மின்சார ரயில்கள் ரத்து

சென்னை: ரயில் பாதை மேம்பாட்டு பணி காரணமாக, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி தடத்தில், இன்று எட்டு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மீஞ்சூர், அத்திப்பட்டு ரயில் நிலையங்களில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் இன்று நடக்கின்றன. இதனால், சில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று ரத்து சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 9:00, கடற்கரை - கும்மிடிப்பூண்டி காலை 9:40 மணி ரயில்களும், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் காலை 9:55, காலை 11:25, கும்மிடிப்பூண்டி - கடற்கரை காலை 10:55 மணி ரயில்களும் ரத்து செய்யப்படுகின்றன. ஒரு பகுதி ரத்து சூலுார்பேட்டை - சென்ட்ரல் காலை 10:00 மணி ரயில், பொன்னேரி வரை மட்டுமே இயக்கப்படும். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி கா லை 10:30, 11:35 மணி ரயில்கள், எண்ணுார் வரை மட்டுமே இயக்கப்படும். சிறப்பு ரயில்கள் எண்ணுார் - சென்ட்ரலுக்கு காலை 10:36, பகல் 12:08 மணிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து சேது விரைவு ரயில் 'தாம்பரம் - ராமேஸ்வரம் சேது விரைவு ரயில், நாளை முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும்' என, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எழும்பூர் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால், விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சேது, அனந்தபுரி, உழவன் உட்பட எட்டு விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, எழும்பூரில் நடைமேம்பாலம் பணிகள் ஓரளவுக்கு முடிந்துள்ளதால், தாம்பரம் - ராமேஸ்வ ரம் செல்லும் சேது விரைவு ரயில், நாளை முதல் எழும்பூரில் இருந்து இயக்கப்படும். மேலும், ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சேது ரயில், இன்று எழும்பூர் வரை இயக்கப்படும். எழும்பூ ரில் பணிகள் முடியு ம்போது, அனைத்து விரைவு ரயில்களும், மீண்டும் எழும்பூரில் இருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்