உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தடகளத்தில் அசத்தும் மாற்றுத்திறன் மாணவி

 தடகளத்தில் அசத்தும் மாற்றுத்திறன் மாணவி

குன்றத்துார்: குன்றத்துார் அருகே உள்ள நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் சனா, 14. மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியான இவர், அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 8ம் வகுப்பு படிக்கிறார். இவர், கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் நடந்த, 3வது டவுன் சிண்ட்ரோம் தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று, குண்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும், 'வாக்கத்தான்' எனும் வேகநடை போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தினார். இதேபோல், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில், சென்னையில் நடந்த மாநில அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், குண்டு எறிதலில் நான்கு பிரிவுகளில் பங்கேற்று, நான்கிலும் தங்கப்பதக்கம் வென்றார். மேலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த, 28 மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று, இலக்கை நிறைவு செய்து பாராட்டு சான்றிதழ்களை பெற்றுள்ளார். அறிவுசார் குறைபாடுடையோருக்கான போட்டியில் சிறந்து விளங்கி, தமிழகத்தில் இளம் வயதில் பதக்கங்களை குவித்து வரும் சிறுமி சனாவை, பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில், கடந்த 1ம் தேதி நடந்த விழாவில், சிறுமி சனாவுக்கு கவர்னர் ரவி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை