| ADDED : நவ 13, 2025 12:37 AM
கொடுங்கையூர்: கொடுங்கையூர், எழில் நகர், பி - பிளாக், 3வது தெருவைச் சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 38; அ.தி.மு.க.,வில் ஐ.டி., விங்கில் இணை செயலராக உள்ளார். பிரியதர்ஷினி, அ.தி.மு.க., மகளிர் அணி மேற்கு பகுதி செயலர் ஜமுனாவுடன் கடந்த ஒரு மாதமாக நட்புடன் பழகி வந்துள்ளார். ஜமுனாவின் நடவடிக்கை பிடிக்காததால், பிரியதர்ஷினி அவருடன் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜமுனா, நேற்று திடீரென பிரியதர்ஷினி வீட்டிற்கு சென்று 'ஏன் கட்சி வேலைக்கு என்னை கூப்பிடவில்லை; எல்லாரிடமும் என்னை பற்றி ஏன் தப்பு தப்பாக பேசுற' எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டு தாக்கினார். அதை பார்த்து பதறிய பிரியதர்ஷினியின் கணவர் அருள், சண்டையை தடுக்க முயன்றபோது, ஜமுனாவின் கணவர் குமார், உறவினர் உஷாராணி ஆகியோர் அருளை தாக்கினர். அக்கம்பக்கத்தினர் இருதரப்பினரையும் தடுத்து, காயமடைந்த பிரியதர்ஷினியை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். கொடுங்கையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.