உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது

 ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் கைது

சென்னை: ஏலச்சீட்டு நடத்தி, 2.34 கோடி ரூபாய் மோசடி செய்த, சிட்பண்ட் நிறுவன உரிமையாளரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், 63, சென்னை மத்திய குற்றப்பிரிவில் அளித்த புகார்: தன் மனைவி, தம்பி இருவரும் ராயப்பேட்டை யில் மருந்து வணிகம் செய்து வருகின்றனர். தம்பி மூலம் மண்ணடி உட்பட இரு இடங்களில், 'சிகரம், சிற்பி' என்ற பெயர்களில், சிட்பண்ட்ஸ் நிறுவனம் நடத்தி வந்த ரவி என்பவர் அறிமுகமானார். அவரிடம், 2015ம் ஆண்டு முதல், அவர் நடத்தி வந்த ஏலச்சீட்டில் பல்வேறு திட்டத்தில் சேர்ந்து, 2.34 கோடி ரூபாய் கட்டினேன். பின், முதலீடு செய்த பணத்தை திருப்பித்தரும் வகையில், இந்தியன் வங்கியின் எட்டு காசோலைகளை ரவி கொடுத்தார். அவற்றை வங்கியில், டிபாசிட் செய்தபோது பணமின்றி திரும்பியது. எனவே மோசடியில் ஈடுபட்ட ரவி மீது, சட்டப்படி நடவடிக்கை எடுத்து, இழந்த பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து, மோசடியில் ஈடுபட்டு தலைமறைவான சிட்பண்ட் நிறுவன உரிமையாளர் ரவி, 57; என்பவரை, புதுச்சேரியில் வைத்து நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி