உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தொடரும் உண்ணாவிரதம்: துாய்மை பணியாளர் அட்மிட்

 தொடரும் உண்ணாவிரதம்: துாய்மை பணியாளர் அட்மிட்

அம்பத்துார்: அம்பத்துாரில், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட துாய்மைப் பணியாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அம்பத்துாரில் உள்ள உழைப்போர் உரிமை இயக்க அலுவலகத்தில், ராயபுரம் மற்றும் திரு.வி.க., நகர் மண்டலங்களைச் சேர்ந்த நான்கு பெண் துாய்மை பணியாளர்கள், நிரந்தர பணி கோரியும், தமிழக அரசை கண்டித்தும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நான்கு பெண் துாய்மை பணியாளர்களும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், அதே மண்டலங்களைச் சேர்ந்த வேறு நான்கு பெண் துாய்மை பணியாளர்கள், தங்களது இரண்டாம் கட்ட உண்ணாவிரத போராட்டத்தை கடந்த 1ம் தேதி துவங்கினர். போராட்டத்தின் ஏழாவது நாளான நேற்று, திரு.வி.க., நகர் மண்டலத்தைச் சேர்ந்த துாய்மை பணியாளர் சரஸ்வதி, 39, என்பவரின், உடல்நிலை மோசமடைந்து மயங்கினார். பின் உழைப்போர் உரிமை இயக்கத்தினர், அவரை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூன்று பெண் துாய்மைப் பணியாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி