உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தெரு பலகையில் பெயின்ட் ஊற்றி பெண் கவுன்சிலர் பெயர் அழிப்பு

 தெரு பலகையில் பெயின்ட் ஊற்றி பெண் கவுன்சிலர் பெயர் அழிப்பு

விருகம்பாக்கம்: விருகம்பாக்கம், 128வது வார்டு பெண் கவுன்சிலர் கார் நொறுக்கப்பட்ட நிலையில், மாநகராட்சி பெயர் பலகையில், அவரது பெயர் பெயின்ட் ஊற்றி அழிக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம் மண்டலம், விருகம்பாக்கம் 128வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் தி.மு.க.,வைச் சேர்ந்த ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா. கடந்த அக்., 3ம் தேதி, காமராஜர் சாலையில் உள்ள வார்டு அலுவலகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கவுன்சிலரின் காரை, மர்ம நர்கள் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், விருகம்பாக்கம், பெருமாள் கோவில் இரண்டாவது தெருவில் உள்ள மாநகராட்சி பெயர் பலகையில் எழுதப்பட்டிருந்த கவுன்சிலர் பெயரை, மர்ம நபர்கள் சிலர் பெயின்ட் ஊற்றி அழித்துள்ளனர். இதுகுறித்து, தனிப்பட்ட முறையில் தன் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக, கவுன்சிலர் தரப்பில், விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் சட்டசபை தொகுதியில் போட்டியிட கவுன்சிலர் ஸ்டெல்லா ஜாஸ்மின் ரத்னா முயற்சிப்பதாகவும், அதனால், கட்சியினர் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், கவுன்சிலர் தரப்பில் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ