| ADDED : டிச 07, 2025 05:28 AM
பம்மல்: பம்மலில் உள்ள ஸ்ரீ சங்கரா கண் மருத்துவமனையில் ஆண்டுதோறும் டிச., மாதம் முதல் வாரத்தில், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்படும். இந்தாண்டு நிகழ்ச்சி, மருத்துவமனை வளாகத்தில், நேற்று நடந்தது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த, 150 தன்னார்வலர்கள் பங்கேற்றனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் முகாம்களில், தன்னார்வலர்களின் பங்கு குறித்து பேசப்பட்டது; அவர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினராக, ரோட்டரி இன்டர்நேஷனல் முன்னாள் மாவட்ட ஆளுநர் முத்துபழனியப்பன் பேசுகையில், ''மருத்துவமனையின் நிர்வாக அறங்காவலர் விஸ்வநாதனின், 90வது பிறந்த நாளில், தன்னார்வலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது மகிழ்ச்சி. போலியோ ஒழிப்பு நடவடிக்கையில், ரோட்டரி சங்கத்தின் பங்கு முக்கியமானது. பல அரசுகளையும், பல நிறுவனங்களையும் ஒன்று சேர்க்கும் சக்தி உடையது ரோட்டரி சங்கம். அதேபோல், சங்கரா கண் மருத்துவமனையின் சேவையும் விரிவடைந்துள்ளது,'' என்றார்.