உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஹேப்பி ஹார்ட்ஸ் திட்டம் அப்பல்லோவில் துவக்கம்

 ஹேப்பி ஹார்ட்ஸ் திட்டம் அப்பல்லோவில் துவக்கம்

சென்னை: பள்ளி மாணவர்களுடன், இளம் வயது இதய நோயாளிகள் விளையாடி மகிழ்ச்சி அடையும்,'ஹேப்பி ஹார்ட்ஸ்' திட்டம், அப்பல்லோ மருத்துவமனையில் துவக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி இளங்குமரன் கலியமூர்த்தி கூறியதாவது: குழந்தைகள் தினத்தையொட்டி, அப்பல்லோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் அப்பல்லோ ஷைன் அறக்கட்டளையுடன் இணைந்து, 'ஹேப்பி ஹார்ட்ஸ்' என்ற திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இளம் வயது இதய நோயாளிகள், பள்ளி மாணவர்களுடன் விளையாடுதல், கடிதம் பரிமாற்றம், பேசுதல் உள்ளிட்ட மறக்க முடியாத, மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாக்கப்படும். பள்ளி மாணவர்களை, குழந்தை பருவத்தில் இருக்கும் மருத்துவ பயனாளர்களுடன் நேரம் செலவிட செய்வதன் வாயிலாக, கவலைகளை மறந்து, மகிழ்ச்சியான தருணங்கள் அவர்களுக்கு கிடைக்கும். இந்த முயற்சி, அனைத்து அப்பல்லோ மருத்துவமனைகளிலும் செயல்படுத்தி, நோயாளிகளுக்கான மகிழ்ச்சி வலுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை