தென்மேற்கு நீச்சல் சாம்பியன்ஷிப் பெங்களூரு ஜெயின் பல்கலை அபாரம்
சென்னை,எஸ்.ஆர்.எம்., பல்கலையில் நடந்து வரும், தென்மேற்கு மண்டல நீச்சல் மற்றும் டைவிங் சாம்பியன்ஷிப் போட்டியில், பெங்களூரு ஜெயின் பல்கலை மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று வருகின்றனர்.அகில இந்திய பல்கலைகளின் கூட்டமைப்பு மற்றும் எஸ்.ஆர்.எம்., பல்கலை இணைந்து, தென்மேற்கு மண்டல பல்கலை நீச்சல் மற்றும் டைவிங் சாம்பியன்ஷிப் போட்டிகள், எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில் நடந்து வருகிறது.பல்கலைகளுக்கு இடையிலான இப்போட்டியில், நாடு முழுதும் இருந்து, 216 பல்கலை அணிகளின், 1,800 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர்.நேற்று காலை நடந்த மூன்றாவது நாள் போட்டியில், ப்ரீஸ்டைல் 1,500 மீ., பிரிவில், பெங்களூரு ஜெயின் பங்கலை பவ்யா சத்தேவா தங்கமும், அதே பல்கலையின் வீராங்கனை அஷ்மிதா சந்திரா வெள்ளியும் வென்றனர்.'பட்டர்பிளை' 200 மீ., பிரிவில், ஜெயின் பல்கலை ஷோன் கங்குலி தங்கமும், அதே பல்கலையின் மற்றொரு வீரர் சுப்ரந்த் பத்ரா வெள்ளியும் கைப்பற்றினர்.இதேபிரிவில், பெண்களில் ஜெயின் பல்கலையின் ஜெடிடா முதலிடமும், சூரத் சர்வஜனிக் பல்கலையின் கல்யாணி இரண்டாம் இடத்தை பிடித்தனர். பெண்களுக்கான 'பிரஸ்ட் ஸ்ட்ரோக்' 100 மீ., பிரிவில், ஜெயின் பல்கலை வாசுபல்லி நாகா கிரீஷ்மினி முதலிடத்தை பிடித்தார்.