உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  முன்விரோதத்தில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

 முன்விரோதத்தில் வாலிபரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

சென்னை: கோட்டூர்புரம் அருகே முன் விரோதத்தில், வாலிபரை கிரிக்கெட் மட்டையால் தாக்கி கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், 22. இவரை, முன்விரோதத்தில், அதே பகுதியை சேர்ந்த முரளி, 20, விவேக், 21, தினேஷ், 21, அரவிந்த் 21, ஆகிய நான்கு பேர், கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தனர். இந்த சம்பவம், 2012ல் நடந்தது. கோட்டூர்புரம் போலீசார் அவர்களை கைது செய்தனர். வழக்கை விசாரித்த சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், முரளி, விவேக், தினேஷ் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து, கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்நிலையில், தலைமறைவான அரவிந்தை பிடித்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அவர் மீதான விசாரணை நீதிபதி ஆர்.சண்முகசுந்தரம் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அரவிந்துக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை