உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பூங்காவில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு தர்ம அடி

 பூங்காவில் சிறுமியிடம் அத்துமீறியவருக்கு தர்ம அடி

பல்லாவரம்: பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, நான்கு வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம், குடியிருப்பு வளாகத்தில் உள்ள சிறுவர் பூங்காவில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது, அதே குடியிருப்பில் வசித்து வரும் சர்புதீன், 47, என்ற நபர், சிறுமியிடம் நைசாக பேசி, மொபைல் போனில் ஆபாச புகைப்படங்களை காட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அதிர்ச்சியடைந்த சிறுமி கூச்சலிடவே, குடியிருப்பு வாசிகள் சர்புதீனுக்கு தர்ம அடி கொடுத்து, சங்கர் நகரில் உள்ள பல்லாவரம் மகளிர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை