உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பி.எஸ்.பி.பி., பள்ளியில் இசை விழா துவக்கம்

 பி.எஸ்.பி.பி., பள்ளியில் இசை விழா துவக்கம்

கே.கே.: பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி குழுமத்தின் நிறுவனர், மறைந்த ராஜலட்சுமி பார்த்தசாரதியின் நுாற்றாண்டு மற்றும் இசை நாட்டிய துவக்க விழா, கே.கே., நகரில் உள்ள பி.எஸ்.பி.பி., எனும் பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளியில் நேற்று நடந்தது. ஜவுளி வர்த்தகர் நல்லி குப்புசாமி பேசியதாவது: ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், ராஜலட்சுமி பார்த்தசாரதியின் 80வது பிறந்த நாள் விழாவிற்கு பள்ளிக்கு வந்தார். பின், அவரது வீட்டிற்கும் சென்றார். பள்ளியில் நடக்கும் நிகழ்ச்சி க்கு தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால், வீட்டிற்கு வரக்கூடாதா என, ராஜலட்சுமி பார்த்தசாரதியிடம் கேட்டு, அவரது வீ ட்டிற்கும் அப்துல்கலாம் சென்றார். இந்த நிகழ்வு, ஒய்.ஜி.பி., அவர்களின் மேன்மையை அனைவருக்கும் உணர்த்துகிறது. வியாபா ரத்தில் இருந்த நான், கல்வித்துறையில் கவனம் செலுத்த வந்ததற்கு, அவரும் ஒரு காரணம். அவரது கல்வி முறை, கலையையும் பண்பாட்டையும் அடிப்படையாக கொண்டது. அதுதான், பத்ம சேஷாத்ரி பள்ளி மாணவர்களை தனித்து காட் டுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, லால்குடி கிருஷ்ணன் மற்றும் லால்குடி விஜயலட்சுமியின் வயலின் கச்சேரி நடந்தது. இன்று 6:30 மணிக்கு பவித்ரா சீனிவாசன் பரதநாட்டியம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ