உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை: மக்கள் அவதி

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை: மக்கள் அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். 'டிட்வா' புயல் காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொடர்ந்து மழை பெய்ததால், சென்னையில் இயல்பு வாழ்க்கை நேற்று முடங்கியது. சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம் வீடு, கோவில் உள்ளிட்ட பகுதிகளை சூழ்ந்தது. சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.இந்நிலையில் சென்னையில் நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. சென்னையில் இருந்து 50 கி.மீ., தொலைவில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை