உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வெளிநாட்டில் இருந்து கஞ்சா ஆமை கடத்தி வந்த நபர்கள் கைது

 வெளிநாட்டில் இருந்து கஞ்சா ஆமை கடத்தி வந்த நபர்கள் கைது

சென்னை: மலேஷிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, மலேஷியன் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்தது. இதில் வந்த வட மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், 3.42 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தார். இதன் சர்வதேச மதிப்பு, 1.20 கோடி. இவரை, சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அதேபோல, தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் இருந்து, லயன் ஏர்லைன்ஸ் விமானம், நேற்று இரவு சென்னை வந்தது. இந்த விமானத்தில், 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 700 கிராம் கஞ்சா கடத்தி வந்த மற்றொரு வட மாநில வாலிபரையும் கைது செய்துள்ளனர். சிங்கப்பூரில் இருந்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், நேற்று இரவு சென்னை வந்தது. இதில், மலேஷிய நாட்டைச் சேர்ந்த ஒருவர், கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூர் வழியாக, சுற்றுலா பயணி போல சென்னைக்கு வந்தார். தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுங்கத்துறை அதிகாரிகள் அவரின் உடமைகளை சோதனை செய்தனர். அதில், 2,085 சிவப்பு காது நட்சத்திர ஆமைகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்தியாவுக்குள் இந்த ஆமைகளை அனுமதித்தால், அதன் வாயிலாக வெளிநாட்டு நோய் கிருமிகள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு பரவக்கூடும். நீர்நிலைகளும் பாதிக்கப்படும் என்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்த ஆமைகளை கடத்தி வந்த நபரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவரை மலேஷிய நாட்டு போலீசாரிடம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை