உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின்சாரம் பாய்ந்து தபால் ஊழியர் காயம்

மின்சாரம் பாய்ந்து தபால் ஊழியர் காயம்

பம்மல், பம்மல், நாகல்கேணி கண்ணாயிரம் தெருவில் உள்ள ஒரு கம்பெனியில் பார்சல் எடுப்பதற்காக, நேற்று முன்தினம், எழும்பூர் தபால் அலுவலகத்தில் இருந்து, பார்சல் வாகனம் ஒன்று வந்தது.வாகனத்துடன் ஊழியர்கள் இருவர் வந்தனர். பார்சலை ஏற்றுவதற்காக, வாகனத்தின் கதவை திறந்த போது, அருகேயிருந்த மின் பெட்டியில் எதிர்பாராத விதமாக உரசி, ஆண்டாங்குப்பம், கடப்பாக்கம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த கிரிஷ்குமார், 26, என்ற ஊழியர் துாக்கி வீசப்பட்டு காயமடைந்தார்.அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி