| ADDED : நவ 17, 2025 03:32 AM
துரைப்பாக்கம்: துரைப்பாக்கத்தில் கழிவுநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால், 1.75 ஏக்கர் பரப்பு கொண்ட பூங்காவை, பொதுமக்கள் பயன்படுத்த முடியவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சோழிங்கநல்லுார் மண்டலம், 193வது வார்டு, துரைப்பாக்கம், சாய் நகரில், 1.75 ஏக்கர் பரப்பில் ஒரு பூங்கா உள்ளது. பல ஆண்டுகளாக இந்த பூங்காவை மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், பூங்காவை ஒட்டி கழிவுநீர் திட்ட பணி நடக்கிறது. இதற்கான பொருட்களை பூங்காவில் கொட்டி வைத்துள்ளனர். மேலும், வாகனங்கள் பூங்காவில் சென்றதால், நடைபயிற்சி பாதை, குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன. இதனால், பூங்காவை மக்கள் பல மாதமாக பயன்படுத்த முடியவில்லை. பணியை விரைந்து முடித்து, மக்க ள் பயன்பாட்டுக்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் வலியுறுத்தினர். இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, 'கழிவுநீர் திட்ட பணிகள், 2026ம் ஆண்டு முடியும். அதுவரை பூங்காவை மக்கள் பயன்படுத்த முடியாது. பணி முடிந்த பின், வாரியம் வழங்கும் நிதியில், பூங்காவை புதுப்பித்து வழங்கப்படும்' என்றனர்.