உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநகர பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபருக்கு காப்பு

 மாநகர பஸ்சில் பெண்ணிடம் அத்துமீறிய வாலிபருக்கு காப்பு

பெரம்பூர்: மாநகர பேருந்தில் பெண்ணிடம் அத்துமீறிய, வாலிபர் கைது செய்யப்பட்டார். பெரம்பூரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண், தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஈக்காட்டுதாங்கலில் இருந்து திரு.வி.க.நகருக்கு செல்லும் தடம் எண் '170 சி' பேருந்தில், பயணம் செய்தார். அப்போது, அசோக் நகர் நிறுத்தத்தில் ஏறிய வாலிபர், அப்பெண்ணின் பக்கத்தில் நின்றுகொண்டு, பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அதிர்ச்சியடைந்த அப்பெண் கூச்சலிட்டதை அடுத்து, ரெட்டேரி சந்திப்பில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர், அந்த வாலிபரை பிடித்து, ராஜமங்கலம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரித்ததில், கே.கே.நகரைச் சேர்ந்த பரணிராஜா, 35, என்பது தெரிந்தது. இளம்பெண் அளித்த புகாரின்பேரில் அத்துமீறிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ஆட்டோ ஓட்டுநர் கைது புழல் பகுதியை சேர்ந்த, 15 வயது சிறுமி, தனியார் பள்ளியில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, பள்ளி முடிந்து, ஓட்டேரியைச் சேர்ந்த சின்னதம்பி, 38, என்பவரின் 'ராபிடோ' ஆட்டோவில் வீட்டுக்கு வந்துள்ளார். கதிர்வேடு அருகே ஆட்டோவை நிறுத்திய சின்னதம்பி, மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். பின், மாணவியை வீட்டில் விட்டு, அங்கிருந்து தப்பினார். சம்பவம் குறித்து, மாணவி தன் பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்படி விசாரித்த புழல் போலீசார், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின்கீழ், ஆட்டோ ஓட்டுநர் சின்னதம்பியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்