உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கே.கே., நகர் 60 அடி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

 கே.கே., நகர் 60 அடி சாலையில் நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

கே.கே.: கே.கே., நகர் 60 அடி சாலை நடைபாதையில் இருந்த ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். கோடம்பாக்கம் மண்டலம், 138வது வார்டில், கே.கே., நகர் 60 அடி சாலை உள்ளது. இது, கே.கே., நகர் மற்றும் எம்.ஜி.ஆர்., நகர் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. இச்சாலையில், எம்.ஜி.ஆர்., கால்வாயை ஒட்டி, ஏராளமான பழைய பொருட்கள் மற்றும் பர்னிச்சர்கள், பீரோ, நாற்காலிகள் உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் அனைத்தும், நடைபாதைகளை ஆக்கிரமித்து இருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன், சாலையோரம் லோடு வேன், ஆட்டோ, மினி லாரி உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், 60 அடி சாலையில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை, மாநகராட்சி ஊழியர்கள், 'பாப் காட்' இயந்திரம் மூலம் நேற்று அப்புறப்படுத்தினர். மேலும், அதே பகுதியில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் முளைக்காத விதமாக, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை