உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயணியர் நிழற்குடைக்கு ரூ.10 லட்சம்; திருமுல்லைவாயலில் வெடித்தது சர்ச்சை

பயணியர் நிழற்குடைக்கு ரூ.10 லட்சம்; திருமுல்லைவாயலில் வெடித்தது சர்ச்சை

ஆவடி: திருமுல்லைவாயல் அருகே, கணபதி நகரில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து பயணியர் நிழற்குடைக்கு 10 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இரும்பு குழாய், தகர ஷீட், டைல்ஸ் என, எப்படி கணக்கு போட்டாலும் சரியாக வரவில்லையே என, பொதுமக்கள் குற்றம் சாட்டினர். திருமுல்லைவாயில், சோழம்பேடு பிரதான சாலையில் கணபதி நகர் பேரு ந்து நிறுத்தம் உள்ளது.இங்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், 10 லட்சம் ரூபாயில், நவீன பேருந்து நிழற்குடை கட்டப்பட்டு, நேற்று முன்தினம் அமைச்சர் நாசர் திறந்து வைத்தார். எந்த நவீன வசதியும் இல்லாத இந்த நிழற்குடை, 300 முதல் 400 சதுர அடிக்கும் குறைவாக இருக்கும் நிலையில், இதற்கு எப்படி 10 லட்சம் ரூபாய் செலவாகும் என, கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க, இந்த நிழற்குடை திறப்பு நிகழ்ச்சி குறித்து, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள், பத்திரிகை செய்தி குறிப்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய 'பேருந்து நிலையம்' திறப்பு என, செய்தி வெளியிட்டுள்ளது. இது அலட்சியத்தின் வெளிப்பாடாக இருக்கிறது.

அதிகபட்சம் ரூ.3 லட்சம் தான்

கட்டுமான பொறியாளர்கள் கூறியதாவது: தற்போது உள்ள ஒரு சதுர அடிக்கு 2,000 ரூபாய் வைத்தால் கூட 10 லட்சம் ரூபாயில் 500 சதுர அடியில் வீடு கட்டலாம். அதில், கதவு, ஜன்னல், டைல்ஸ், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் என அனைத்து வேலையும் செய்யலாம். மேற்படி நிழற்குடை கட்டுவதற்கு அதிகபட்சமாக 3 லட்சம் ரூபாய் தான் செலவாகி இருக்கும். குறிப்பாக, மழைக்காலத்தில் சாரல் அடித்தால் கூட, மக்கள் புது நிழற்குடையில் குடை பிடித்தபடி நிற்கும் அவல நிலை தான் ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ