உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மாநில பெஞ்ச்பிரஸ் சாம்பியன்ஷிப் 300 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

 மாநில பெஞ்ச்பிரஸ் சாம்பியன்ஷிப் 300 வீரர் - வீராங்கனையர் உற்சாகம்

சென்னை: கீழ்க்கட்டளையில் நேற்று துவங்கிய மாநில அளவிலான, 'கிளாசிக் பெஞ்ச்பிரஸ்' சாம்பியன்ஷிப் போட்டியில், 300 வீரர் - வீராங்கனையர் உற்சாகமாக பங்கேற்றுள்ளனர். தமிழக பவர்லிப்டிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிளாசிக் பெஞ்ச்பிரஸ் சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று கீழ்க்கட்டளை பகுதியில் துவங்கியது. இதில், 'எக்யூப்ட்' மற்றும் 'அன் எக்யூப்ட்' ஆகிய இரு வகைகளில், சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் பிரிவுகளில், இருபாலருக்கும் தனித்தனியாக போட்டிகள் நடக்கின்றன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், மதுரை என, அனைத்து மாவட்டங்களில் இருந்தும், வீரர் - வீராங்கனையர்பங்கேற்றுள்ளனர். முதல் நாளான நேற்று நடந்த, 'எக்யூப்ட்' பிரிவு போட்டியில், 100 வீராங்கனையர் உட்பட, 300க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பிரிவிலும், 53, 59, 63, 95, 108 உள்ளிட்ட ஒன்பது எடை பிரிவுகளில், போட்டிகள் தனித்தனியாக நடக்கின்றன. ஆண்களுக்கான 53 கிலோ எடை பிரிவு சப் - ஜூனியரில், நெல்லையை சேர்ந்த காஜாமொய்தீன், 18; ஜூனியரில் மேற்கு சேலம் தினேஷ்குமார், 19, ஆகியோர் முதலிடங்களை கைப்பற்றினர். அதேபோல், 59 கிலோ எடை பிரிவு சப் - ஜூனியரில், சென்னையைச் சேர்ந்த ஜெய்ஆகாஷ், 18; ஜூனியர் மற்றும் சீனியரில் மேற்கு சேலம் சாமுவேல் வசந்த், 21, ஆகியோர் முதலிடத்தை கைப்பற்றினர். இதே எடை பிரிவு மாஸ்டர் -1ல், செங்கல்பட்டு சிவா, 46, மாஸ்டர் - 3ல் சென்னை லக்ஷ்மணன், 67, மாஸ்டர் - 4ல் துாத்துக்குடி சுந்தர்ராஜ், 76, ஆகியோர் முதலிடத்தை பிடித்தனர். தெடர்ந்து போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று 'அன் எக்யூப்ட்' போட்டிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்