மேலும் செய்திகள்
டூவீலர் மீது கார் மோதி வாலிபர் பலி
29-May-2025
அரும்பாக்கம், அரும்பாக்கத்தைச் சேர்ந்த 35 வயது பெண். தன் கணவருடன் சூளைமேடில் வசித்து வருகிறார். இவர் வசிக்கும் வீட்டின் மாடியில் தமிழ்செல்வன் என்பவர் குடியிருக்கிறார்.பக்கத்து வீட்டில் வசிக்கும் நபர் என்பதாலும், நட்புடன் பழகுவதாலும், அப்பெண் தமிழ்செல்வனிடம் பழகி வந்துள்ளார்.இந்நிலையில், தமிழ்செல்வன் அப்பெண்ணை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும், கணவரை பிரிந்து, தன்னுடன் வந்து வாழுமாறு கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெண், தமிழ்செல்வனிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்.ஆனால், தமிழ்செல்வன் தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார். மேலும், அவர் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டு, அப்பெண்ணை தாக்கியுள்ளார்.இதில், காயமடைந்த அப்பெண், அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், திருமணமான பெண்ணை தொல்லை செய்வது சரியில்லை என, அவருக்கு அறிவுரை கூறினர்.ஆனால், அப்பெண் இல்லாமல் என்னால் வாழ முடியாது என, காவல் நிலையத்தில் தமிழ்செல்வன் ரகளையில் ஈடுபட்டார்.இதையடுத்து, வீடு புகுந்து பெண்ணை தாக்கியதாக, தமிழ்செல்வன் மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
29-May-2025