உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தமிழக கால்பந்து அணிக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

 தமிழக கால்பந்து அணிக்கு ஏர்போர்ட்டில் உற்சாக வரவேற்பு

சென்னை: சத்தீஸ்கர் மாநிலம், நராயண்பூரில், தேசிய சப் - ஜூனியர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் சாம்பியன் கோப்பையை வென்ற தமிழக அணி, நேற்று தமிழகம் திரும்பியது. கால்பந்து வீரர்களுக்கு, சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது. அணியின் தலைமை பயிற்சியாளர் எட்வின் கூறுகையில், ''தமிழக அணி, எந்த பிரிவிலும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றதில்லை; ஆனால் இந்த முறை, கோப்பையை வென்றுள்ளது; புதிய வரலாறு படைத்து உள்ளது. ''இந்த வெற்றிக்காக வீரர்கள், அயராது உழைத்தனர். தமிழக அணி 24 கோல் அடித்து, முதல் டையர் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. கடின பயிற்சி மற்றும் அர்ப்பணிப்பால் இந்த வெற்றி கிடைத்துள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை