உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்

 வார்டு அலுவலகத்தில் குண்டு வீசியவர் சிக்கினார்

கண்ணகி நகர்: சென்னை மாநகராட்சி, கண்ணகி நகர் வார்டு அலுவலகத்தில், நாட்டு வெடிகுண்டு வீசிய சம்பவத்தில், ஒரு நபரை போலீசார் நேற்று, கள்ளக்குறிச்சியில் கைது செய்தனர். சோழிங்கநல்லுார் மண்டலம், 196வது வார்டு அலுவலகம், கண்ணகி நகரில் உள்ளது. கடந்த 10ம் தேதி, இந்த வார்டு அலுவலகத் தில் மூன்று பேர் நாட்டு வெடிகுண்டு வீசினர். இதில், சுவர், டியூப் லைட், முதல்வர் ஸ்டாலின் படம் சேதமடைந்தது. கண்ணகி நகர் போலீசார் விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், 24, செந்தில், 21, விஸ்வா, 20, என தெரிந்தது. தலைமறைவான இவர்களை, போலீசார் தனிப் படை அமைத்து தேடினர். இதில் சந்தோஷ், கள்ளக்குறிச்சியில் நண்பர் வீட்டில் இருப்பது தெரிந்தது. சந்தோஷ், அவருக்கு அடைக்கலம் கொடுத்த பார்த்திபன், 21, ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்தனர். எதற்காக நாட்டு வெடிகுண்டு வீசினர் என, சந்தோஷிடம் விசாரணை நடக்கிறது . தலைமறைவான இருவரையும் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி